/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை கொட்டும் இடமான திருவஞ்சேரி சாலை
/
குப்பை கொட்டும் இடமான திருவஞ்சேரி சாலை
ADDED : நவ 21, 2024 12:33 AM

கேம்ப் சாலை சந்திப்பில் இருந்து பிரிந்து செல்கிறது, அகரம் பிரதான சாலை. இச்சாலையில் மப்பேடு சந்திப்பில் இருந்து இடது புறம் திரும்பினால், மதுரப்பாக்கம், பொன்மார் வழியாக கேளம்பாக்கம் சாலையை அடையலாம். வலது புறம் திரும்பினால், பெருங்களத்துார், வெங்கம்பாக்கம் பகுதிகளுக்கு செல்லலாம்.
இச்சாலையில், திருவஞ்சேரி, திடீர் நகரில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, மீடியன் கட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை செடிகளை நட்டு பராமரிக்காததால், அப்பகுதி முழுக்க முழுக்க குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது.
மூட்டை மூட்டையாக கிடக்கும் குப்பையால், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் அதிகரித்து தொற்றுநோய் பரவுகிறது. இதைத் தடுக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை தேவை.
- என்.குமார், திருவஞ்சேரி.

