/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோலடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
கோலடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முற்றுகை
கோலடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முற்றுகை
கோலடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு திருவேற்காடு நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : மே 07, 2025 11:58 PM

திருவேற்காடு, திருவேற்காடு, கோலடி பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 44 சென்ட் நிலம் உள்ளது. அங்கு, பூவிருந்தவல்லி, மாங்காடு நகராட்சி மற்றும் ஒன்பது ஊராட்சியை ஒருங்கிணைத்து, பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்க உள்ளன.
இதற்காக, கோலடி மைதானத்தில் உள்ள 33 சென்ட் நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பகுதிவாசிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், கோலடியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர், நேற்று காலை திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
மயங்கிய பெண்
கமிஷனரிடம் மனு அளிக்க சென்றனர். கமிஷனர் இல்லாததால், அவர் வரும் வரை அலுவலக வாசலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, கடும் வெயிலால் எழிலரசி என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர் ரமேஷ் தன்ராஜ் கூறியதாவது:
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 13 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய சட்ட விதிகளின்படி, குடியிருப்பு, கோவில், பள்ளிகளில் இருந்து, 500 மீட்டர்; நீர்நிலையில் இருந்து 250 மீட்டர் இடைவெளியில் தான் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
ஆனால், அதிகாரிகள் தேர்வு செய்துள்ள இடம் குடியிருப்புகளுக்கு அருகில் உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், அப்பகுதியில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டு, மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி, கோலடியில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற முயன்றால், சட்டம் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
***

