ADDED : அக் 24, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர்
வாலிபர் கைது
திருவொற்றியூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, 10 வகுப்புடன் படிப்பு நிறுத்தி, கடை ஒன்றில் வேலை பார்க்கிறார். நேற்று சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. சிறுமியின் தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அங்கு சிறுமியை மருத்துவர் பரிசோதித்த போது, எட்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து, திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், அதே கடையில் ஓட்டுனராக வேலை பார்த்த முத்துக்குமார், 29, என்பவர், சிறுமியிடம் திருமண ஆசைக்காட்டி கர்ப்பமாக்கியது தெரியவந்தது.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், முத்துக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான முத்துக்குமாருக்கு, திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர்.