/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் பரிசு காத்திருந்தோர் அதிருப்தி
/
பொங்கல் பரிசு காத்திருந்தோர் அதிருப்தி
ADDED : ஜன 11, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்குன்றம், செங்குன்றத்தில், ஐந்து ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக காலை, 8:30 மணி முதல் கார்டுதாரர்கள் காத்திருந்தனர்.
ஆனால், தி.மு.க.,வை சேர்ந்த நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி துவக்கி வைத்த பிறகே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என, சைதாப்பேட்டை தாலுகா வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரிகள், ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர்.
அதனால், இரண்டு மணி நேரம் வெயிலில் காத்திருந்த கார்டுதாரர்கள் அதிருப்தி அடைந்தனர். காலை, 10:30 மணிக்கு பின், தலைவர் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் வந்தனர். அவர்களுடன் பகுதிமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.