ADDED : ஜன 08, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
செம்மஞ்சேரி: சோழிங்கநல்லுார், கே.கே., சாலையை சேர்ந்தவர் செல்வராஜ், 35. ஆட்டோ ஓட்டுநர். இரண்டு மாதங்களுக்கு முன், போ தையில் இருந்த ஆறு பேர், இவரிடம் வீண் தகராறு செய்து, இவரை சரமாரியாக தாக்கினர்.
புகாரின்படி வழக்கு பதிந்த செம்மஞ்சேரி போலீசார், நான்கு பேரை கைது செய்தனர். இரண்டு பேர் தலைமறைவாக இருந்தனர் .
இந்நிலையில், தலைமறைவாக இருந்த, மேடவாக்கத்தை சேர்ந்த அருண்குமார், 22, விக்னேஷ், 22, ஆகியோரை, நேற்று போலீசார் கைது செய்தனர்.
