ADDED : ஜன 29, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:திருவான்மியூர், சிங்காரவேலர் நகரைச் சேர்ந்தவர் வித்யாசாகர், 20; உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தோர் அஜய், 21, விக்னேஷ், 30.
இரண்டு தரப்புக்கும், முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு, சாலையில் நின்று கொண்டிருந்த வித்யாசாகரை, இரண்டு பேரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினர்.
இது குறித்து வழக்கு பதிந்த திருவான்மியூர் போலீசார், அஜய், விக்னேஷ் ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.