/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விஜய் கட்சியின் வட்டச்செயலரை பதவி ஆசையில் தாக்கியோர் கைது
/
விஜய் கட்சியின் வட்டச்செயலரை பதவி ஆசையில் தாக்கியோர் கைது
விஜய் கட்சியின் வட்டச்செயலரை பதவி ஆசையில் தாக்கியோர் கைது
விஜய் கட்சியின் வட்டச்செயலரை பதவி ஆசையில் தாக்கியோர் கைது
ADDED : மே 29, 2025 12:32 AM
கே.கே.நகர், வளசரவாக்கம், அம்பேத்கர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அமல் ஆண்ட்ரூ, 27; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, கே.கே.நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின், உறவினர் தாமஸ் என்பவருடன் வீடு திரும்பினார்.
கே.கே.நகர், கிழக்கு வன்னியர் தெரு வழியாக சென்றபோது, சாலையோரம் இருவர் சேர்ந்து ஒருவரை சரமாரியாக தாக்கி கொண்டிருந்தனர். இதை அமல் ஆண்ட்ரூ தட்டிக்கேட்க, அவரையும் அவரது உறவினரான தாமசையும் தாக்கி விட்டு, இருவரும் தப்பினர்.
காயமடைந்த அமல் ஆண்ட்ரூ கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், இவர்களை தாக்கியது ராமாபுரம், பெரியார் தெருவைச் சேர்ந்த முத்துஜா அகமது, 27, மற்றும் அவரது நண்பரான வளசரவாக்கம், பெரியார் நகரைச் சேர்ந்த சாம் விஜய், 26, என்பது தெரியவந்தது.
இருவரும் முதலில் தாக்கியது, வளசரவாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த ஹரிஹரன் அய்யப்பன், 38, என்பது தெரியவந்தது. ஹரிஹரன் அய்யப்பனுக்கு, த.வெ.க., கட்சியில் வளசரவாக்கம் 152வது வார்டு வட்ட செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதை பிடிக்காத முத்துஜா அகமது மற்றும் சாம் விஜய் ஆகியோர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.