/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவுகார்பேட்டை வாலிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
/
சவுகார்பேட்டை வாலிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
சவுகார்பேட்டை வாலிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
சவுகார்பேட்டை வாலிபரை கடத்தி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியோர் கைது
ADDED : ஜூலை 15, 2025 12:37 AM

யானைகவுனி, சவுகார்பேட்டை வாலிபரை கடத்தி, 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் சுமேர்சிங், 25. இவர், ரிச்சி தெருவில் மொபைல்போன் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் சவுகார்பேட்டை, என்.எஸ்.சி.போஸ் சாலையில் நின்றபோது, அங்கு வந்த சிலர் சுமேர்சிங்கை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, அண்ணாநகரில் உள்ள ஒரு குடியிருப்பில் அடைத்து வைத்தனர்.
பின், 50 லட்ச ரூபாய் கேட்டு சுமேர்சிங்கின் தந்தை காலுசிங்கிற்கு போன் செய்து மிரட்டினர். இது குறித்து, யானைகவுனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அண்ணா நகர் விரைந்த போலீசார், சுமேர்சிங்கை மீட்டனர்.
கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட, தாம்பரத்தைச் சேர்ந்த நவீன்குமார், 30, ஈரோடைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சரத், 22, மாதவரத்தைச் சேர்ந்த சுரேந்தர், 34, ஆகிய மூவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் நான்கு மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், 50 லட்ச ரூபாய் 'ஹவாலா' பணம் 'கமிஷன்' அடிப்படையில் கைமாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையில், சுமேர்சிங்கை, அவருக்கு பழக்கமான மூவர் கும்பல் கடத்தி, பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது. வழக்கில் முக்கிய குற்றவாளியான சலீமை போலீசார் தேடி வருகின்றனர்.