ADDED : மார் 16, 2024 12:14 AM

அ நிறம் | அளவு
வியாசர்பாடி, அம்பத்துார், புதுகோவில் தெருவைச் சேர்ந்தவர் பிஜு, 31; வியாசர்பாடி பேருந்து பணிமனை நடத்துனர்.
இவர், நேற்று முன்தினம் மாலை, மாதவரம், மில்க் காலனி சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த இருவர் பிஜுவுடன் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றிய நிலையில், இருவரும் சேர்ந்து பிஜுவை கத்தியால் மார்பில் குத்தி தப்பினர்.
ரத்தவெள்ளத்தில் சரிந்த பிஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரித்தனர்.
இதில், வியாசர்பாடியைச் சேர்ந்த ரனில் விக்ரம், 21, வடபெரும்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த், 24, என்பது தெரிய வந்தது.
இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
