/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
த.வெ.க., நிர்வாகி பெயரில் 'யு - டியூபர்'களுக்கு மிரட்டல்
/
த.வெ.க., நிர்வாகி பெயரில் 'யு - டியூபர்'களுக்கு மிரட்டல்
த.வெ.க., நிர்வாகி பெயரில் 'யு - டியூபர்'களுக்கு மிரட்டல்
த.வெ.க., நிர்வாகி பெயரில் 'யு - டியூபர்'களுக்கு மிரட்டல்
ADDED : அக் 03, 2025 12:19 AM
கோயம்பேடு, த.வெ.க., நிர்வாகி எனக்கூறி, 'யு - டியூபர்'களுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோயம்பேடில் உள்ள ரோகிணி தியேட்டரில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படம், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு, வெளியில் நின்ற 'யு - டியூப்' சேனல்களுக்கு, மக்கள் பேட்டி கொடுத்து வந்தனர்.
அப்போது, பிரபல 'யு - டியூப்' சேனலை சேர்ந்த இருவர் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர், த.வெ.க., நிர்வாகி எனக் கூறி, கரூர் விபத்து குறித்து பேசி வாக்குவாதம் செய்தார். பின், அரும்பாக்கம், மதுரவாயல் பகுதி த.வெ.க., நிர்வாகி எனக் கூறி, யு - டியூபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறி த்து, அந்த யு - டியூப் சேனல் சார்பில், கோயம்பேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணையில், மிரட்டல் விடுத்த நபர், அரும்பாக்கம், மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.