ADDED : ஜன 28, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு,பேசின்பாலம் அருகே பவர் மில்ஸ் சாலையில், கஞ்சா விற்கப்படுவதாகவும் தலைமறைவு ரவுடிகள் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனால், நேற்று முன்தினம் பேசின்பாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த புளியந்தோப்பை சேர்ந்த வெற்றி, 39, கைது செய்தனர். பின், ஏற்கனவே கைது செய்திருந்த விஷ்வா, 24, என்பவருடன் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதேபோல், புளியந்தோப்பு மற்றும் ஓட்டேரி பகுதியில், பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடியான புளியந்தோப்பை சேர்ந்த ஜான்சன், 22, என்பவரை, ஓட்டேரி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர் மீது, நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன.