தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குடிபோதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய மூன்று பேர் கைது

குடிபோதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய மூன்று பேர் கைது

குடிபோதையில் எஸ்.ஐ.,யை தாக்கிய மூன்று பேர் கைது


UPDATED : மார் 03, 2026 05:49 AM

ADDED : மார் 03, 2026 05:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 05:49 AM ADDED : மார் 03, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொருக்குப்பேட்டை: குடிபோதையில், போலீஸ் எஸ்.ஐ.,யை தாக்கிய மூன்று பேரை போலீசார் கைது செ ய்தனர்.

பழைய வண்ணாரப்பேட்டை, எம்.எஸ்., நாயுடு தெரு டாஸ்மாக் கடையில், நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். இதையறிந்த, கொருக்குப்பேட்டை எஸ்.ஐ., தனசேகரன் உள்ளிட்ட போலீசார், அங்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, போதை ஆசாமிகள் திடீரென தாக்கியதில், எஸ்.ஐ.,க்கு காயம் ஏற்பட்டது. தாக்குதலை தடுக்க முயன்ற போதை ஆசாமி ரமேஷ் என்பவரும் கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கொருக்குப்பேட் டை போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டன், 26, செந்தில் குமார், 37, ரமேஷ், 46, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

தாக்குதலில் காயமடைந்த எஸ்.ஐ., தனசேகர், கீழே விழுந்து காயமடைந்த போதை ஆசாமி ரமேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us