அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை தாக்கிய மூன்று பேர் கைது
அமைச்சர் ரோஜாவின் உதவியாளரை தாக்கிய மூன்று பேர் கைது
ADDED : பிப் 05, 2024 01:55 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பி.எம்.எஸ். நகரைச் சேர்ந்தவர் பிரதீஷ், 35; ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சர் ரோஜாவின் உதவியாளர். நகரியில் இருசக்கர வாகன ேஷாரூம் வைத்துள்ளார்.
கடந்த 2ம் தேதி காலை, பிரதீஷ் தன் வீட்டருகே நடைபயிற்சி சென்ற போது, மர்ம நபர்கள் மூவர் வழிமறித்து இரும்பு ராடால் தாக்கிவிட்டு தப்பினர். இதில், இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகாரின்படி திருத்தணி தனிப்படை போலீசார், மர்ம நபர்களை தேடி வந்தனர்.
நேற்று, திருத்தணி--- நாகலாபுரம் நெடுஞ்சாலை, தாழவேடு பகுதியில் நடந்த வாகன சோதனையில், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் வந்தவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அவர், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டம் நகரி மேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நவீன், 31, என்பதும், பிரதீைஷ தன் நண்பர்களுடன் சேர்ந்து, இரும்பு ராடால் தாக்கி கொல்ல முயன்றதும் தெரிந்தது.
போலீசாரிடம் நவீன் கூறியதாவது:
தெலுங்கு தேசம் கட்சியின் நகரி ஒன்றிய இளைஞரணி துணை தலைவராக உள்ளேன்.
ரோஜாவின் உதவியாளர் பிரதீஷ், எங்கள் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுவதுடன் என்னையும், எங்கள் கட்சியினரையும் மிரட்டி வந்தார்.
எங்கள் கட்சியின் நகரி மண்டல இளைஞரணி தலைவர் சிட்டிபாபு என்பவர், 'பிரதீைஷ கொன்றுவிட்டால், வரும் சட்டசபை தேர்தலில் எளிதாக வெற்றி பெறுவேன்' என, என்னிடம் கூறினார்.
இதையடுத்து நானும், கட்சி நிர்வாகிகள் சிரஞ்சீவி, 24, பரசுராம், 39, ஆகிய மூவரும் சேர்ந்து, இரும்பு ராடால் கடுமையாக தாக்கினோம். அவ்வழியே வந்த பெண்கள் கூச்சலிட்டதால் தப்பிச் சென்றோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து திருத்தணி போலீசார், மேற்கண்ட மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
