ADDED : அக் 22, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி, ஆவடி, பிருந்தாவன் நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் தன்ராஜ், 68. இவர், ஆவடி அடுத்த சேக்காடு, வி.ஜி.என்., அப்பார்ட்மென்ட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, அப்பார்ட்மென்ட் அருகே, காலி இடத்தில் நான்கு பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அதை, தன்ராஜ் தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நான்கு பேரும், அவரை சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றனர். இது குறித்து விசாரித்த ஆவடி போலீசார், ஆவடி தேவி நகரைச் சேர்ந்த அருண், 22, காமராஜர் நகரைச் சேர்ந்த பிரகாஷ், 19, சோழவரத்தைச் சேர்ந்த விக்கி, 23, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர்.