/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பனை தாக்கி பைக்கை சேதப்படுத்திய மூவர் கைது
/
நண்பனை தாக்கி பைக்கை சேதப்படுத்திய மூவர் கைது
ADDED : ஜூன் 04, 2025 12:14 AM
வடபழனி, கே.கே., நகர், ராணி அண்ணா நகர் குடியிருப்பை சேர்ந்தவர் பிரகாஷ், 23; தனியார் மருத்துவமனை ஊழியர்.
கடந்த 1ம் தேதி, இவரது வீட்டிற்கு வந்த அவரது நண்பர்கள் எழில், ஸ்ரீராம், குமார், மணி ஆகியோர், பிரகாஷ் பைக்கை வாங்கி சென்றனர்.
வெகு நேரமாகியும் பைக்கை திருப்பி தராததால், அன்று இரவு சிவலிங்கபுரம், 82வது தெருவில் நின்ற, எழில், 18, ஸ்ரீராம், 19, குமார், 19, மற்றும் மணியிடம் தனது பைக்கை கேட்டார்.
அப்போது, நான்கு பேரும் சேர்ந்து, அவரை கட்டை மற்றும் குழாயால் தாக்கி, பைக்கை கல்லால் சேதப்படுத்தினர்.
பின், பிரகாஷ் வீட்டில் பைக்கை நிறுத்தி விட்டு, அங்கிருந்த இரு ஹெல்மெட்டை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரையடுத்து, கே.கே., நகர் போலீசார், எழில், ஸ்ரீராம், குமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.