ADDED : ஏப் 26, 2026 10:27 PM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி: வியாசர்பாடி, மேல்பட்டி பொன்னப்பன் தெருவைச் சேர்ந்த நரேஷ், 26, நேற்று முன்தினம் இரவு, சஞ்சய் நகர் அருகே, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த மூவர், நரேஷை சரமாரியாக தாக்கி தப்பினர். அரசு ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சை பெற்ற இருவரும், எம்.கே.பி., நகர் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிந்த போலீசார், வியாசர்பாடி சாலமன், 19, பிரதீப்குமார், 21, சஞ்சய் குமார், 19, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்தனர். ஏரியாவில் யார் பெரியவர் என்ற பிரச்னையில், இவர்களுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.
