/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் பைக் திருட்டு மூவர் கைது
/
ஓ.எம்.ஆரில் பைக் திருட்டு மூவர் கைது
ADDED : மார் 24, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார், காரப்பாக்கம் பகுதியில், இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டன.
செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தபோது, சோழிங்கநல்லுார், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜனா, 22, வினித், 25, சூர்யா, 25, ஆகியோர், திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.
போலீசார், நேற்று மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது, ஏற்கனவே கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் ஆகிய காவல் நிலையங்களில், வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட, எட்டு வழக்குகள் உள்ளன.