/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த மூவர் கைது
ADDED : ஏப் 01, 2025 01:06 AM
அமைந்தகரை, ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரபிக், 19. இவர், ரம்ஜான் கொண்டாடுவதற்காக, அமைந்தகரை அய்யாவு காலனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, நேற்று முன்தினம் மாலை வந்தார்.
பின், இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, ஷெனாய் நகர் சாலையில் நடந்து சென்றார். அப்போது, ரபிக்கை வழிமறித்த மூவர், பணம் கேட்டு மிரட்டினர்.
ரபிக் பணம் தர மறுத்ததால், கத்தியை காட்டி மிரட்டி, 2,500 ரூபாயை பறித்து தப்பினர். இதுகுறித்து, அமைந்தகரை காவல் நிலையத்தில், நேற்று ரபிக் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்து, சூளைமேடு பகுதியை சேர்ந்த அசாருதீன், 26, சந்தோஷ்குமார், 23, மணிகண்டன், 28, ஆகிய மூவரையும், நேற்று காலை கைது செய்து விசாரிக்கின்றனர்.

