/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் கைது
/
கட்டட தொழிலாளியிடம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : ஏப் 12, 2025 09:48 PM
மடிப்பாக்கம்:ஆந்திராவை சேர்ந்தவர் தோட்டாய், 28. இவர், கீழ்கட்டளையில் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் கீழ்க்கட்டளை சந்திப்பில் உள்ள கடையில், டீ அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு நின்ற மூவர், கூட்டத்தை பயன்படுத்தி, குறிப்பிட்ட நபரின் பாக்கெட்டில் இருந்த, 4,500 ரூபாயை திருடியுள்ளனர்.
இதையறிந்த தோட்டாய், பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர்கள், தோட்டாயை ஆபாசமாக பேசி, கையால் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
இதுகுறித்து, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில், தோட்டாய் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில், சம்பவத்தில் ஈடுபட்டது, கோவிலம்பாக்கத்தை சேர்ந்த தனசேகர், 41, கீழ்க்கட்டளையை சேர்நத பிரேம்குமார், 34, மோகன், 31, என்பது தெரிந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த, 670 ரூபாயை கைப்பற்றி, சிறையில் அடைத்தனர்.

