/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., நிர்வாகியிடம் ரூ.41 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த மூவர் கைது - கார்ட்டூன் உண்டு

ADDED : மே 16, 2025 12:45 AM
சென்னை, கொருக்குப்பேட்டை, திருநாவுக்கரசு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார் ஜெயின், 45. பா.ஜ., நிர்வாகி. கடந்த மாதம், 17 ம் தேதி ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த, கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, அவரது பாக்கெட்டில் வைத்திருந்த 41 ஆயிரம் ரூபாயை திருடப்பட்டது. இது குறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில், அசோக்குமார் ஜெயின் புகார் அளித்தார்.
வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்தனர். இதில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர், 55, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால், 39, கே.கே.நகரைச் சேர்ந்த மணி, 65 ஆகிய மூவர், பா.ஜ., கூட்டம் நடந்த இடத்தில் ஊடுவி பிக் பாக்கெட் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
மூவரையும் நேற்று கைது செய்து, அவர்கள் திருடி வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய், மூன்று மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் மூவரில் பாஸ்கர் மீது, ஏற்கனவே நான்கு திருட்டு வழக்குகளும், கோபால் மீது இரண்டு திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.