ADDED : பிப் 02, 2026 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு: வாடிக்கையாளர்களை மொபைல் போனில் அழைத்து, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்ற மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.
ஆதம்பாக்கத்தை சேர்ந்த பிரவீன், 27, விக்னேஷ், 27, சுரேஷ், 25, ஆகியோர், வாடிக்கையாளர்களை மொபைல் போனில் வரவழைத்து, சென்னை முழுதும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்று வந்தனர்.
நேற்று, அடையாறு, எல்.பி., சாலையில் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். தகவலின்படி அங்கு விரைந்த, அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மூன்று பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா, 200 போதை மாத்திரை கள் பறிமுதல் செய்யப்பட்டன.

