/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற மூவர் கைது
/
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற மூவர் கைது
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற மூவர் கைது
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற மூவர் கைது
ADDED : ஏப் 12, 2025 09:40 PM
சென்னை:சேப்பாக்கம், கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டி நடந்தது.
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபடுவோரை பிடிப்பதற்காக திருவல்லிக்கேணி ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில், மைதானத்தை சுற்றி, 10க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்து. கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்த, மூன்று பேரை இக்குழுவினர் கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, 53, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த செந்தில்குமார், 32, சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிரத்னம், 28 ஆகிய மூவரை கைது செய்து, 11 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.