/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற மூவர் கைது
/
மெத் ஆம்பெட்டமைன் விற்ற மூவர் கைது
ADDED : ஏப் 23, 2025 12:33 AM
அரும்பாக்கம்,
அரும்பாக்கத்தில் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அரும்பாக்கம் தனியார் ஹோட்டல் அருகே கண்காணித்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை மடக்கி சோதித்தனர்.
அவர்களிடம், மெத் ஆம்பெட்டமைன் எனும் போதை பொருள் இருந்தது. அவர்களிடம் விசாரித்ததில், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ரேவந்த் மணிகண்டன், 29, அமைந்தகரையைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, 31, என்பது தெரிந்தது.
அவர்கள் அளித்த தகவலின்படி, அயனாவரத்தைச் சேர்ந்த பரத், 27, ஆகிய மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து, 8 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருள், ஒரு இரு சக்கர வாகனம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன.