ADDED : ஏப் 19, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
கொடுங்கையூர்: கொடுங்கையூரில் போதை மாத்திரைகளை விற்ற மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், எம்.ஜி.ஆர்.நகரில், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த விற்பதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், நசரத்பேட்டையைச் சேர்ந்த விக்னேஷ், 26, எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த நிதிஷ்குமார், 22, அருள்ராஜ், 25, ஆகிய மூவரை, நேற்று கைது செய்தனர்.
இவர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, ஒரு அட்டை மாத்திரையை, 300 ரூபாய்க்கு வாங்கி, கொடுங்கயைூர் பகுதிகயில் 1,000 ரூபாய்க்கு விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து, 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
