/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பீஹாரிலிருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்ற மூவர் கைது
/
பீஹாரிலிருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்ற மூவர் கைது
பீஹாரிலிருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்ற மூவர் கைது
பீஹாரிலிருந்து கஞ்சா கடத்தி சென்னையில் விற்ற மூவர் கைது
ADDED : டிச 18, 2024 12:27 AM
குமரன் நகர், ஜாபர்கான்பேட்டை பாரி நகரில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவ்வீட்டில் நேற்று முன்தினம், போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், அந்த வீட்டில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அங்கிருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்த நிலையில், ஒருவர் தப்பி சென்றார்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜூஸ் மாஸ்டர் சர்பராஜ், 21, தையல்காரர் முகமது ரபிக், 28, பைக் மெக்கானிக் ஆசிப், 19, என, தெரியவந்தது.
மேலும், தப்பி சென்றவர் அப்தாப், 22, என்பதும் தெரிந்தது.
தாம்பரத்தில் தங்கியிருந்த அப்தாப், கடந்த நவ., மாதம் முதல் ஜாபர்கான்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன், சொந்த ஊரான பீஹார் சென்று வந்த போது, கஞ்சா வங்கி வந்துள்ளார்.
பின், அதை பீஹார் மாநிலத்தை சேர்ந்த நபர்களின் 'வாட்ஸ் ஆப்' குழு வழியாக விற்பனை செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்த குமரன் நகர் போலீசார், அவர்களிடம் இருந்து 6.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, தப்பிச்சென்ற அப்தாபை தேடி வருகின்றனர்.