/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது
/
ஒடிசாவிலிருந்து கஞ்சா கடத்திய மூவர் கைது
ADDED : நவ 15, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர் ரயில் நிலையம் - மாட்டுமந்தை மேம்பாலம் அருகே, நேற்று முன்தினம் இரவு, திருவொற்றியூர் போலீசார் கண்காணித்தனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற மூவரிடம் விசாரித்து, அவர்களது பையை சோதனையிட்டனர். அதில், மூன்று கிலோ கஞ்சா இருந்தது.
தொடர்புடைய, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபு, 26, ஹரிஷ், 26, கோயம்பத்துாரைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். கஞ்சாவின் மதிப்பு, 1 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என, போலீசார் கூறினர்.