ADDED : டிச 11, 2024 12:26 AM
வியாசர்பாடிவியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த விஷ்ணு, 19. கடந்த 6ம் தேதி அதிகாலை, வீட்டருகே உள்ள டீக்கடையில் டீ குடித்தார். அவர் தன் பைக் மீது வைத்திருந்த மொபைல் போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அதேபோல, வியாசர்பாடி, பாலகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 77. இவர், கடந்த 6ம் தேதி காலை, வியாசர்பாடி, மார்க்கெட் அருகே சென்றபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், ராமகிருஷ்ணனின் சட்டை பையில் இருந்த மொபைல் போனை பறித்து தப்பினர். இரு புகார்கள் குறித்து வியாசர்பாடி போலீசார் விசாரித்தனர்.
இதில், புளியந்தோப்பைச் சேர்ந்த நசீர், 22, வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தாகீர் இஸ்லாம், 21, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அந்த மொபைல் போன்களை வாங்கிய, தண்டையார்பேட்டை, படேல் நகர், 3வது தெருவைச் சேர்ந்த சோட்டுஷா, 23, என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

