/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
374 மது பாட்டில் பறிமுதல் அண்ணா நகரில் மூவர் கைது
/
374 மது பாட்டில் பறிமுதல் அண்ணா நகரில் மூவர் கைது
ADDED : பிப் 06, 2025 12:25 AM

அண்ணா நகர்அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில், கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பதாக, அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., ஜெயபிரகாஷ் ஆகியோர், அன்னை சத்யா நகர் - நியூ ஆவடி சாலை சந்திப்பில், சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆட்டோவை மடக்கினர்.
ஆட்டோவில் நடத்திய சோதனையில், எட்டு அட்டை பெட்டியில், 374 குவார்ட்டர் மது பாட்டில்கள் இருந்தன. விசாரணையில், கொலை வழக்கு குற்றவாளியான டி.பி., சத்திரத்தைச் சேர்ந்த இளைய சூர்யா, 26, மணிமாறன், 34, அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லாரன்ஸ், 33, என்பது தெரிந்தது.
இவர்கள், அதேபகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையில், மதுபாட்டில்களை வாங்கி, சுற்றுவட்டாரப் பகுதிகளில், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்க முயன்றுள்ளனர்.
அவர்களிடம் இருந்து, மதுபாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நேற்று காலை சிறையில் அடைத்தனர்.