/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் பள்ளிக்கரணையில் மூவர் கைது
/
ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் பள்ளிக்கரணையில் மூவர் கைது
ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் பள்ளிக்கரணையில் மூவர் கைது
ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல் பள்ளிக்கரணையில் மூவர் கைது
ADDED : பிப் 13, 2024 12:25 AM
பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
ஓசூரிலிருந்து பள்ளிக்கரணை பகுதிக்கு, கஞ்சா கடத்தி வரப்படுவதாக, பள்ளிக்கரணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை 6:00 மணியளவில், பள்ளிக்கரணை ரேடியல் சாலை, தனியார் மருத்துவமனை அருகே வந்த, வெளிமாநில பதிவு எண் உள்ள இரு கார்களை மடக்கி சோதனை செய்ததில், அதில் 10 லட்சத்து 10,000 ரூபாய் மதிப்புள்ள 101 கிலோ கஞ்சா இருந்தது.
இதையடுத்து, இரு கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தில் இருந்த மூன்று நபர்களை, பள்ளிக்கரணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் அவர்கள், ஒடிசாவைச் சேர்ந்த ஜிபன் விஸ்வாஸ், 30, பலராம் புஜாரி, 25, மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த சாஜி குமார், 32, என தெரிந்தது.
இதையடுத்து, அவர்கள் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.