தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கார்பென்டரை கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் உட்பட மூவர் கைது

 கார்பென்டரை கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் உட்பட மூவர் கைது

 கார்பென்டரை கடத்திய அ.தி.மு.க., பிரமுகர் உட்பட மூவர் கைது


ADDED : பிப் 26, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கார்பென்டரை ஆட்டோவில் கடத்தி, 2 சவரன் நகையை பறித்து சென்ற அ.தி.மு.க., பிரமுகர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டை, சைவ முத்தையா, 5வது தெருவைச் சேர்ந்தவர் பாலு, 40 ; கார்பென்டர். இவர் கோபாலபுரத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த, 28 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே ஆசிரியை பணியை விட்ட பெண் அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். அப்போதும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அப்பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கு பாலு சென்றார். அப்போது, அப்பெண் அங்கு பணிபுரியும் நண்பர்களுடன் அமர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாலு, இதுகுறித்து, கேட்டபோது, இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில், அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண், பாலுவை பழிவாங்க திட்டமிட்டு, ராயப்பேட்டை, அ.தி.மு.க., 118வது வார்டு வட்ட செயலர் கானா ஆறுமுகம், புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த குமார், 45, உதவியை நாடினார்.

இதையடுத்து, இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் ஆட்டோவில் பாலுவை கடத்திச் சென்று, ஐ.டி., பெண்ணை தொடர்பு கொள்ளக்கூடாது என மிரட்டியுள்ளனர். மேலும் பாலு கழுத்தில் அணிந்திருந்த, 2 சவரன் செயின், மொபைல் போனை பறித்து தப்பினர்.

இதுகுறித்து விசாரித்த ராயப்பேட்டை போலீசார், அ.தி.மு.க., நிர்வாகி ஆறுமுகம், புரட்சி பாரத கட்சியைச் சேர்ந்த குமார், ஆட்டோ ஓட்டுநர் நவீன்குமார் ஆகிய முவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஐ.டி., பெண்ணை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us