தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சரக்கு வாகனத்தில் பேட்டரி திருட்டு மாணவர்கள் உட்பட மூவர் கைது

 சரக்கு வாகனத்தில் பேட்டரி திருட்டு மாணவர்கள் உட்பட மூவர் கைது

 சரக்கு வாகனத்தில் பேட்டரி திருட்டு மாணவர்கள் உட்பட மூவர் கைது


ADDED : மே 13, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொளத்துார்: சரக்கு வாகனத்திலிருந்து பேட்டரி திருடிய இரண்டு கல்லுாரி மாணவர்கள், பழைய பொருட்கள் விற்பனை கடைக்காரர் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.

கொளத்துார், பூம்புகார் நகர் இரண்டாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரேம்குமார், 36, இவர் கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.

தனது லோடு வாகனத்தை, தனது வீட்டின் வாசலில் நேற்று முன்தினம் நிறுத்தியிருந்தார்.

சிறிது நேரம் கழித்து வாகனத்தை சென்று பார்த்தபோது, அதிலிருந்த பேட்டரி திருடு போனது தெரிந்தது. இது குறித்து, கொளத்துார் போலீசில் பிரேம் குமார் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

அங்குள்ள, 'சிசிடிவி' காட்சிகளின்படி, கல்லுாரி மாணவர்களான திரு.வி.க., நகரைச் சேர்ந்த ஹரிஹரன், 20, கொளத்துாரைச் சேர்ந்த கெவின் ரனெல், 20, மற்றும் பழைய பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் ஹஜ் ஹூசைன், 29, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, மூன்று பேட்டரி, பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us