/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
/
நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
நகை, பணம் கடன் வாங்கி ஏமாற்றிய இரு பெண்கள் உட்பட மூவர் கைது
ADDED : மார் 22, 2025 12:33 AM

அண்ணா நகர்,அண்ணா நகர், எட்டாவது தெருவில் வசிப்பவர் யாமினி, 40. இவருக்கு, 2013ல் அதே பகுதியை சுமதி, ராஜதுரை, மலர் ஆகிய மூவரும் வெவ்வேறு வழிகளில் அறிமுகமாகி, நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
மூவரும் பல்வேறு தேவைகளை கூறி, யாமினியிடம் கொஞ்சம் கொஞ்சமாக, 26.5 லட்சம் ரூபாய் மற்றும் 17 சவரன் தங்க நகைகளை கடனாக வாங்கினர்.
அவற்றை யாமினி திருப்பி கேட்டகும்போது, பல்வேறு காரணங்களைக்கூறி, ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து, யாமினி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிமன்ற உத்தரவுபடி, அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மூவரும் யாமனியிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகளை கடனாக பெற்று ஏமாற்றியது உறுதியானது.
இதையடுத்து, திருவேற்காடு, வீரராகவபுரம் பகுதியை சேர்ந்த சுமதி 43, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜதுரை, 54, தண்டையார்பேட்டை சேர்ந்த மலர் 41 ஆகிய மூவரையும், அண்ணாநகர் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
***