தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூன்று 'பைக்'குகள் தீயில் எரிந்து நாசம்

மூன்று 'பைக்'குகள் தீயில் எரிந்து நாசம்

மூன்று 'பைக்'குகள் தீயில் எரிந்து நாசம்


ADDED : நவ 30, 2024 12:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2024 12:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.கே.பி.நகர்,

சென்னை, வியாசர்பாடி, தேபர் நகர், 10வது தெருவை சேர்ந்தவர் தேவி, 43. இவரது வீட்டில் சத்யராஜ், 36, என்பவர் வாடகைக்கு வசிக்கிறார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, தேவி அவரது டி.வி.எஸ்., --எக்ஸ்.எல்., வாகனத்தையும், சத்யராஜ் அவரது பல்சர், யமஹா பாசினோ ஆகிய வாகனங்களையும் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தனர்.

நேற்று அதிகாலை திடீரென வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன. அக்கம்பக்கத்தவர்கள் கொடுத்த தகவலின்படி, முல்லை நகர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

மின்சார ஒயர் மீது இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us