தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மின் ஒயரில் சிக்கி மூன்று பசு மாடுகள் பலி

மின் ஒயரில் சிக்கி மூன்று பசு மாடுகள் பலி

மின் ஒயரில் சிக்கி மூன்று பசு மாடுகள் பலி


ADDED : அக் 18, 2026 05:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2026 05:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி மூன்று பசுக்கள் பரிதாபமாக இறந்தது.

காஞ்சிபுரம் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

அப்போது, உத்திரமேரூர், நீரடி எல்லைக்கு உட்பட்ட வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் வீடு திரும்பிக்கொண்டிருந்தன.

இந்நிலையில், காற்று, மழையால் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பத்தில் இருந்த மின்ஒயர் அறுந்து கீழே விழுந்துள்ளது.

இதில், வேடபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் என்பவருக்கு சொந்தமான மூன்று பசுக்கள் இந்த மின் ஒயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தன. உயிர் இழந்த பசுக்களுக்கு உத்திரமேரூர் அரசு கால்நடை மருந்தகம் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். உத்திரமேரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us