/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆதரவற்ற மூவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
/
ஆதரவற்ற மூவர் காப்பகத்தில் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 20, 2025 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில், ஆதரவற்ற நிலையில் இருந்த மூன்று பேரை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, மாநகராட்சி மறுவாழ்வு காப்பகத்திடம் ஒப்படைத்தனர்.
எழும்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் இரவில், வழக்கம் போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, மெய்யநாதன், 50, கண்ணன், 54, மாணிக்கம், 62, ஆகிய மூன்று பேரும், ஆதரவற்ற நிலையில் இருந்தனர்.
அவர்களால், தங்களது முழு முகவரியையும் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை. இந்த மூன்று பேரும் மீட்கப்பட்டு, மணலியில் உள்ள சென்னை மாநகராட்சி, ஏ.ஆர்.எம்., ஆண்கள் மறுவாழ்வு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.