/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பை வாகனத்தில் இருந்து டப்பா விழுந்து மூவர் காயம்
/
குப்பை வாகனத்தில் இருந்து டப்பா விழுந்து மூவர் காயம்
குப்பை வாகனத்தில் இருந்து டப்பா விழுந்து மூவர் காயம்
குப்பை வாகனத்தில் இருந்து டப்பா விழுந்து மூவர் காயம்
ADDED : ஜூலை 01, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம், குப்பை வாகனத்தில் இருந்து பிளாஸ்டிக் டப்பா விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற மூவர் காயமடைந்தனர்.
திருமுடிவாக்கத்தை சேர்ந்த வாசுதேவன், 31. இவர் நேற்று காலை, மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன், இருசக்கரவாகனத்தில் தாம்பரம் சென்றார்.
அப்போது, முன்னாள் சென்ற மாநகராட்சி குப்பை வாகனத்தில் இருந்து, பிளாஸ்டிக் டப்பா பறந்து அவர்கள் மீது விழுந்தது. மூன்று பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
காயம் அடைந்த மூவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.