தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லாரி மீது ஆட்டோ மோதி விபத்து சிறுவன் உட்பட மூவர் பரிதாப பலி

லாரி மீது ஆட்டோ மோதி விபத்து சிறுவன் உட்பட மூவர் பரிதாப பலி

லாரி மீது ஆட்டோ மோதி விபத்து சிறுவன் உட்பட மூவர் பரிதாப பலி


ADDED : ஆக 30, 2026 05:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 05:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை, ஆக. 31–

முன்னால் சென்ற லாரி மீது, ஆட்டோ மோதிய விபத்தில், ஒரு சிறுவன் உட்பட இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன், 42; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று முன்தினம் இரவு, மனைவி பூங்கொடி, 39, மகள் தனலட்சுமி, 10, மாமியார் ராதா, 65, மற்றும் பூங்கொடியின் சகோதரர் நாகராஜின் மகன்களான பிரசாந்த், 15, கோகுல், 10, ஆகியோருடன், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஜனப்பன்சத்திரம் – பெரியபாளையம் நெடுஞ்சாலையில், பனப்பாக்கம் கிராமம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ மோதியது. இதில், ஆட்டோ கவிழ்ந்து, அதிலிருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதில், பூங்கொடி சம்பவ இடத்திலேயே பலியானார். அங்கிருந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கிய மற்ற ஐந்து பேரை, மீட்டு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி ராதா, கோகுல் உயிரிழந்தனர்.

மேல் சிகிச்சைக்காக, லோகநாதன், பிரசாந்த், தனலட்சுமி ஆகியோர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பூங்கொடி, கோகுல், ராதா ஆகியோரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, ‘சி.சி.டி.வி’ கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் விபத்தில் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us