தண்டவாளத்தை கடக்க முயன்று ரயிலில் அடிபட்டு மூவர் பலி
தண்டவாளத்தை கடக்க முயன்று ரயிலில் அடிபட்டு மூவர் பலி
ADDED : நவ 28, 2026 08:27 PM
வியாசர்பாடி: பெரம்பூர் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரு பெண் உட்பட மூவர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர்.
பெரம்பூர் லோகோ பகுதியில் இருந்து பெரம்பூர் கேரேஜ் செல்லும் வழியில், நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு, மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், அந்த ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு, நேற்று முன்தினம் மாலை விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. வில்லிவாக்கம் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற, கொளத்துார் பகுதியைச் சேர்ந்த தீபா, 34, என்ற பெண், ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.
அதேபோல், பெரம்பூர் அருகே, விரைவு ரயிலில் அடிபட்டு, புழல் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் ஷரீப், 57 என்பவர் இறந்து கிடந்தார்.
மூன்று பேரின் சடலங்களை கைப்பற்றிய பெரம்பூர் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
