ADDED : செப் 22, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
வண்ணாரப்பேட்டை: முன்விரோதம் காரணமாக, 34 வயது வாலிபரை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்த வழக்கில் தலைமறைவான மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
வண்ணாரப்பேட்டை, மூலக்கொத்தளத்தைச் சேர்ந்தவர் சரவணன், 34. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், 27, என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. அஜித்குமார், கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் சரவணனை மதுபாட்டிலால் குத்திக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் அஜித்குமாரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த அதே பகுதியைச் சேர்ந்த வினோத், 36, வசந்த், 28, வியாசர்பாடியைச் சேர்ந்த சந்திப்பு, 39, ஆகியோரை, நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
