தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'

 சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'

 சிறுமியரிடம் சீண்டல் மூன்று பேருக்கு 'காப்பு'


ADDED : பிப் 02, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொளத்துார்: கொளத்துார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட 30 வயது பெண்ணின் 10 வயது மகள், வீட்டருகே உள்ள பெட்டி கடைக்கு, நேற்று முன்தினம் சென்றார்.

கடையில் இருந்த அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 64, என்பவர், சிறுமியிடம் அத்துமீறினார். கொளத்துார் மகளிர் போலீசார், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

மடிப்பாக்கம் பகுதியில், தனியார் ஆசிரமத்தில் பணிபுரியும் செங்குன்றம், பி.டி., மாருதி நகரைச் சேர்ந்த விக்னேஷ், 33, பழைய துணிகளை வீடு வீடாக சேகரித்தார். அப்போது, ஒரு வீட்டு வாசலில் அமர்ந்திருந்த 12 வயது சிறுமியிடம், அநாகரீகமாக நடந்து கொண்டார். மடிப்பாக்கம் மகளிர் போலீசார், போக்சோவில், விக்னேஷை நேற்று கைது செய்தனர்.

ஆலந்துார் பகுதியை சேர்ந்த, கணவரை பிரிந்த 35 வயது பெண், பழ வியாபாரியான நாகராஜன், 42, என்பவருடன், 'லிவிங் டுகெதர்' உறவில், தன் 15 வயது மகளுடன் வசித்து வந்தார். பெண்ணின் மகளை சீண்டிய நாகராஜன், நேற்று கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us