/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரை வைத்திருந்த மூவருக்கு ' காப்பு '
/
போதை மாத்திரை வைத்திருந்த மூவருக்கு ' காப்பு '
ADDED : பிப் 06, 2025 12:35 AM
சென்னை,ஆயிரம்விளக்கு போலீசார், நேற்று முன்தினம் இரவு, கிரீம்ஸ் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
முருகேசன் காம்ப்ளக்ஸ் அருகே, சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர்.
பின், அவர்கள் கையிலிருந்த பையை சோதனை செய்ததில், 107 போதை மாத்திரைகள், 100 எம்.எல்., அளவுடைய 80 சிரப் பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரை கைது செய்த போலீசார், போதை மாத்திரைகள் மற்றும் 5,700 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
அதேபோல், மதுரவாயல் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த, கார்த்திக், 24, என்பவரை கைது செய்து, 152 மாத்திரைகள், மூன்று ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.