/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கிரானைட்' சுவர் பெயர்ந்து விழுந்து நோயாளி உட்பட மூன்று பேர் காயம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து

ADDED : டிச 04, 2025 01:50 AM

வண்ணாரப்பேட்டை: அரசு ஸ்டான்லி மருத் துவமனையில் பக்கவாட்டு சுவரில் ஒட்டப்பட்டு இருந்த 'கிரானைட்' டைல்ஸ் பெயர்ந்து விழுந்ததில் நோயாளி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
பொன்னேரி, என்.ஜி.ஓ., நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் லதா, 62. இவர் நவ., 28ல் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் 'பி - பிளாக்' கட்டடத்தில் செயல்பட்டு வரும், கை ஒட்டுறுப்பு அறுவை மைய பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தன் பேத்தி நிஷாந்தினி, 25, என்பவருடன் நேற்று காலை 9:30 மணிக்கு சென்றுள்ளார். அங்கு, காத்திருப்பு ஹாலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன், 45, அவரது மனைவி உள்ளிட்டோருடன் அமர்ந்திருந்தனர்.
அப்போது, பக்கவாட்டு சுவரில் ஒட்டப்பட்டு இருந்த 'கிரானைட்' திடீரென பெயர்ந்து அங்கு, அமர்ந்திருந்தவர்கள் மீது விழுந்தது.
இதில், லதாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு, தலையில் மூன்று தையல்களும், இடது கையில் நான்கு தையல்களும், போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அமர்ந்திருந்த நிஷாந்தினி, அன்பழகனுக்கு தோள்பட்டையில், லேசான காயம் ஏற்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.