பாதுகாப்பு பணியில் லஞ்சம் இன்ஸ்., உட்பட மூவர் 'சஸ்பெண்ட்'
பாதுகாப்பு பணியில் லஞ்சம் இன்ஸ்., உட்பட மூவர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 17, 2026 04:05 AM
சென்னை: பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது லஞ்சம் வாங்கிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உட்பட மூவர், நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட எழும்பூர் மற்றும் செயின்ட் தாமஸ் மவுன்ட் ஆகிய பகுதிகளில் ஆயுதப்படை உள்ளது.
இங்கு, பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார், தேவைப்படும் இடங்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
மேலும், வி.ஐ.பி.,க்கள், வி.வி.ஐ.பி.,க்கள் குடியிருப்புகளில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுவர்.
அவ்வாறு, சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, எஸ்.ஐ.,க்களான திருமுருகன், செல்லத்துரை ஆகிய மூவரும் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதை அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், மூவரும் லஞ்சம் வாங்கியது உறுதியானது. நேற்று, சென்னை போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக், மூவரையும் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
