/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயிலில் அடிபட்டு ஆசிரியை உட்பட மூவர் பலி
/
ரயிலில் அடிபட்டு ஆசிரியை உட்பட மூவர் பலி
ADDED : பிப் 13, 2024 12:38 AM

கும்மிடிப்பூண்டி, பட்டாபிராம், நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக, திருவள்ளூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த, அரசு தொடக்க பள்ளி ஆசிரியையான சாந்தி, 55, என தெரிந்தது. இவர், நேற்று காலை வழக்கம் போல் பெரியபாளையம், வெங்கல் அடுத்த காவனுாரில் உள்ள பள்ளிக்கு பேருந்தில் செல்வதற்காக, நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி, தண்டவாளத்தைக் கடந்துள்ளார். அப்போது, சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்தவர் பாஸ்கர், 36; மீனவர். நேற்று முன்தினம் இரவு, ஆரம்பாக்கம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி உயிரிழந்தார்.
கவரைப்பேட்டை அடுத்த திருப்பேர் கிராமத்தில் வசித்தவர் கோவிந்தராஜ், 70. நேற்று, கவரைப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற விரைவு ரயில் மோதி அதே இடத்தில் உயிரிழந்தார்.