/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓட்டுநரிடம் வழிப்பறி மூன்று பேருக்கு 'காப்பு'
/
ஓட்டுநரிடம் வழிப்பறி மூன்று பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 18, 2024 12:14 AM
சென்னை, மயிலாப்பூர், வெள்ளீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவிசந்திரன், 54; கார் ஓட்டுநர்.
கடந்த, 9ம் தேதி இரவு, 11:15 மணிக்கு, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை, ரயில்வே குடியிருப்பிலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக, 'ரேபிடோ பைக் டாக்சி' புக் செய்து காத்திருந்தார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். இது குறித்து வழக்கு பதிந்த நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.
இதில், புரசைவாக்கம், பொன்னன் தெருவைச் சேர்ந்த நந்தகுமார், 21, விஷ்ணு, 21, காமேஷ், 18, ஆகிய மூவரும், மொபைல் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று, இம்மூவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நந்தகுமார், கோயம்பேடு செயின்ட் தாமஸ் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வருவது தெரியவந்தது. விஷ்ணு, மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர்., பல்கலையில் பி.காம்., மூன்றாமாண்டு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.