/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மது அருந்த பணம் தராதவரை தாக்கிய மூவருக்கு 'காப்பு'
/
மது அருந்த பணம் தராதவரை தாக்கிய மூவருக்கு 'காப்பு'
மது அருந்த பணம் தராதவரை தாக்கிய மூவருக்கு 'காப்பு'
மது அருந்த பணம் தராதவரை தாக்கிய மூவருக்கு 'காப்பு'
ADDED : நவ 07, 2024 12:28 AM
புளியந்தோப்பு,
புளியந்தோப்பு கே.பி., பார்க் 3வது பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 49. இவர், நேற்று முன்தினம் மாலை, பவுடர் மில்ஸ் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரை வழிமறித்த மூன்று பேர் கும்பல், குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளனர். கார்த்திக் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறவே, அவரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து சென்றனர்.
கார்த்திக் கொடுத்த புகாரின்படி, பேசின் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், யானைகவுனியை சேர்ந்த காண்டிப்பன் ராஜ், 27, பெரியமேடு பிரபாகரன், 29, மற்றும் பாரிமுனையைச் சேர்ந்த சஞ்சய், 23, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் பேசின்பாலம் போலீசார் கைது செய்தனர்.