ADDED : பிப் 19, 2026 06:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் மூன்று சாலைகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை, முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
திரைப்பட பின்னணிப் பாடகர், திருச்சி லோகநாதன் வசித்து வந்த, சென்னை மந்தைவெளிப்பாக்கம், நார்ட்டன் மூன்றாவது தெருவுக்கு, 'திருச்சி லோகநாதன் தெரு என பெயர் சூட்டப் பட்டுள்ளது.
பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் வசித்து வந்த, மந்தைவெளிப்பாக்கம் கிழக்கு வட்ட சாலைக்கு, 'சீர்காழி கோவிந்தராஜன் சாலை' எனவும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வசித்து வந்த, டிமாண்டி சாலைக்கு, 'எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை' எனவும் பெயர் சூட்டப் பட்டுள்ளது.

