ADDED : ஜன 19, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளியந்தோப்பு, அரக்கோணம், அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ், 43.
இவர், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மனைவி மற்றும் மகளுடன், புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தில் உள்ள மாமியார் வதனா வீட்டுக்கு சென்றுள்ளார்.
கடந்த 16ம் தேதி நள்ளிரவு, மாமியார் வீட்டின் வாசலில் நின்றிருந்த போது, அப்பகுதி வழியாக சென்ற சிலர், 'நீ யார், இந்த ஏரியாவில் உன்னை பார்த்ததில்லையே?' எனக்கேட்டு, ஜெபராஜை தாக்கி, அவரிடமிருந்த 10,000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ஜெபராஜ் புகார் அளித்தார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன், ரவுடியிசம் செய்து பணம் பறித்த புளியந்தோப்பை சேர்ந்த ஜீவா, 24, பரத், 23, மற்றும் ராகுல், 18, ஆகிய மூவரை, போலீசார் கைது செய்தனர்.