ADDED : ஏப் 30, 2025 12:26 AM
ஓட்டேரி, ஏப். 3ஓட்டேரி, நியூ டேங்க் பண்ட் சாலையை சேர்ந்தவர் ராஜ்குமார், 41. நேற்று முன்தினம், இவரது வீட்டின் அருகே, சிறுவர்களை சிலர், மதுபோதையில் துரத்தி உள்ளனர்.
இதை, ராஜ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரம்அடைந்த அந்த நபர்கள், ராஜ்குமாரை தாக்கி, அவரிடமிருந்த மொபைல் போனை பறித்து தப்பினர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராஜ்குமார், 'பைன்ட் மை டிவைஸ்' என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, தன் மொபைல் போன், ஓட்டேரி கொன்னுார் நெடுஞ்சாலையில் இருப்பதை கண்டறிந்தார்.
அங்கு சென்ற ராஜ்குமார், போதையில் இருந்த நபர்களை, அப்பகுதிவாசிகளின் உதவியுடன் பிடித்து, ஓட்டேரி போலீசில் ஒப்படைத்தார்.
மொபைல் போன் பறிப்பில் அயனாவரத்தைச் சேர்ந்த வசந்தகுமார், 23, ஓட்டேரியைச் சேர்ந்த விக்னேஷ், 19, மற்றும்17 வயதுடைய சிறுவன் என்பது தெரிய வந்தது.
மூவரையும் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய கெவின் என்பவரை தேடி வருகின்றனர்.

