ADDED : டிச 22, 2024 09:34 PM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி:சென்னை, வியாசர்பாடி, கூட்செட் சாலை சந்திப்பில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், மர்ம நபர் கும்பல் கத்தியுடன் சுற்றித் திரிவதாக, வியாசர்பாடி போலீசாருக்கு, அப்பகுதிவாசிகள் தகவல் தெரிவித்தனர்.
வியாசர்பாடி போலீசார் விரைந்து சென்று, கத்தியுடன் அப்பகுதியில் சுற்றித்திரிந்த, வியாசர்பாடி, சி.கல்யாணபுரத்தை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குளில் தொடர்புடைய பிரவீன்குமார், 23, கவுதம், 21, வியாசர்பாடி, பள்ள தெருவை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஆகாஷ், 23, ஆகிய மூவரை கைது செய்தனர்.
